டில்லி

விமான ஊழியர்களிடம் தகராறு, சண்டை போடுவோருக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.

இந்த தண்டனையின் விவரம் வருமாறு :

விமான ஊழியர்களை திட்டினால் 3 மாதம் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.  அதே போல் விமான ஊழியர்களை தாக்கினால் ஆறு மாதமும் கொலை மிரட்டல் விடுத்தால் குறைந்தது 2 வருடம் விமானப் பயணம் செய்ய தடை விதிக்கப்படும்.

இந்த சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவருக்கும் பொருந்தும்.  அது மட்டுமின்றி இந்த பயணத்தடை என்பது கூடுதல் தண்டனை ஆகும்.  அதாவது  சட்டப்படி நீதிமன்றத்திலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்,  அது தவிர விமானப் பயணத்தடை தண்டனையும் வழங்கப்படும்.  இது தவிர மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இந்த விமானப் பயணத் தடை விதிக்கும் அதிகாரம் உண்டு.  அவர்களால் தடை செய்யப்பட்டாலும் விமானத்தில் பயணம் செய்ய முடியாது.

இவ்வாறு தண்டனை பற்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.