டில்லி

ர்போர்ட், மால்கள் போன்ற இடத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்கக்கூடாது எனவும், எல்லா இடங்களிலும் ஒரே விலை விதிக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

ஏர்போர்ட்கள், தியேட்டர் மால்கள் போன்ற இடங்களில் எல்லாப் பொருட்களும், எம் ஆர் பி எனப்படும் அதிகபட்ச விலையை விடவே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.  இது பற்றி பலரும் நேரடியாக அரசுக்கும், ஊடகங்களில் தகவலாகவும் புகார்கள் அளித்துள்ளனர்.

இதையொட்டி சட்டத்தில் ஒரு பொருளுக்கு ஒரே விலை என்னும் சட்ட திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இது வரும் 2018 ஜனவர் 1 முதல் அமுலுக்கு வருகிறது.

அதன்படி எந்த ஒரு பொருளுக்கும் எல்லா இடங்களிலும் ஒரே விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.   அதிகபட்ச விலையை கொட்டை எழுத்துக்களில் வாடிக்கையாளர்கள் பார்வையில் சட்டென தெரியும்படி ப்ரிண்ட் செய்ய வேண்டும்.. இந்த சட்டம் அனைத்து ஏர்போர்ட், தியேட்டர்கள், மால்கள் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் என சட்டத் திருத்தம் கூறுகிறது.

ஆனால் உணவு விடுதி உரிமையாளர்கள் இந்தச் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என வாதிடுகிறார்கள்.  ஜிஎஸ்டி அமுலுக்கு வந்தபின் பெரிய உணவு விடுதிகளுக்கு 28%வரை ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளதால் இதை தங்களால் அமுல்படுத்த முடியாது எனவும், அது கவுண்டர் சேல்ஸ் செய்யும் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறுகின்றனர்.

இந்த சட்ட திருத்தம் மருத்துவப் பொருட்களையும் உள்ளடக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.  வெளிநாட்டில் தயாரிக்கப்படும் எந்த மருந்திலும் விலை அச்சிடப்படுவதில்லை எனவும், அவர்கள் நேரடி விற்பனை செய்வதில்லை என்பதால் உண்மை விலையை யாராலும் அறிந்துக் கொள்ள முடிவதில்லை எனவும் கூறுகின்றனர்.

மருத்துவமனை மூலமாக பல மருத்துவப் பொருட்கள் விற்கப்படுகின்றன.   எனவே அந்த பொருட்களும் இந்த சட்டத் திருத்தத்தின் கிழ் வந்தால் உண்மை விலையை கண்டறிய முடியும் என்பதே பலரின் கருத்து.

அரசு இதையும் கருத்தில் கொள்ளும் என நம்புகிறோம்