ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டின் மருத்துவக் கட்டணங்களை சரி பார்க்க குழுக்கள் அமைப்பு

டில்லி

த்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ கட்டணங்களை சரி பார்க்க அரசு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் என்னும் மருத்துவக் காப்பிட்டு திட்டத்தின் மூலம் 1300 சிகிச்சைகளுக்கு  கட்டணத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கு அரசு இந்த கட்டணங்களை அளித்து வந்தது.   ஆனால்  இந்த தொகை மிகவும் குறைவாக உள்ளதாக பல மருத்துவமனைகள் தெரிவித்தன.

.குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் இருதய அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 1 லட்ச்ம் முதல் ரூ.1.5 லட்சம் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ள்து.  அத்துடன் சிசேரியன் பிரசவம் மற்றும் கடினமான பிரசவம்  ஆகியவைகளுக்கு ரூ. 9000 ஆயிர்ம் கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த தொகை மருத்துவர் ஆலோசனைக் கட்டணத்துக்கே போதாத நிலை உள்ளதாக மருத்துவமனைகள் அறிவித்தன.

இதை ஒட்டி சுகாதார ஆய்வுத் துறை கட்டணங்களை பரிசீலித்தது.  அந்த பரிசீலனையின் படி கட்டணங்கள் திருத்தப்பட்டு அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டணங்களை சரி பார்க்க அரசு சார்பில் 24 மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.  சத்திஸ்கர் மற்றும் லக்னோவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நாடெங்கும் உள்ள சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழு தற்போது திருத்தப்பட்ட 1300 சிகிச்சைகளுக்கான கட்டணங்களை சரிபார்க்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.