Random image

10 தேசிய வங்கிகளில் புதிய அதிகாரிகள் நியமனம்

டில்லி

த்து தேசிய வங்கிகளில் புதிய அதிகாரிகள்நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருகின்றன.  மேலும் வாராக்கடன்கள் அதிகரிக்காமல் இருக்கவும் தற்போதுநிலுவையில் உள்ள கடன்களை குறைக்கவும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இதை ஒட்டி திறமையான வங்கி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து இந்த பணிகளை கவனிக்க செய்ய வங்கிகள் அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதை ஏற்றுக் கொண்ட அரசு  தற்போது 10 தேசிய வங்கிகளில் தலைவர், நிர்வாக இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்துள்ளது.  இந்த வரிசையைல் பாரத ஸ்டேட் வங்கிக்கு 5 புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   பாரத ஸ்டேட் வங்கியில் மகோபாத்ர மற்று சந்துரு ஆகியோர் வங்கி சூப்பிரண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  மற்றும் பல்லவ், பக்கிரிசாமி, மற்றும் கர்னம் சேகர் ஆகியோர் நிர்வாக இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் யூகோ வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி, யூனியன் வங்கி, பேன்க் ஆஃப் இந்தியா, அல்லகாபாத் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளுக்கும் தலைமை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   இவர்கள் அனைவரும் வங்கிகள் அமைப்பு பரிந்துரை செய்யப்பட்ட அதிகாரிகள் ஆவார்கள்.