டில்லி:

500 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு பொருள் சில்லறை விற்பனை மேற்கொள்ள அமெரிக்காவின் இ-வர்த்தக நிறுவனமான அமேசானுக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட நாட்களாக இது தொடர்பான கோப்புகள் வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி வாரியத்திடம் கிடப்பில் இருந்தது. தற்போது இந்த அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலை கொள்கை மற்றும் வளர்ச்சி துறை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் படி அமேசான் நிறுவனம் முழு உரிமை கொண்ட வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்கவுளளது. இதன் மூலம் உணவு பொருட்களை இருப்பு வைத்து ஆன்லைனில் விற்பனை செய்யும்.
தற்போது உணவு பதப்படுத்தும் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா 100 சதவீதம் அனுமதி க்கிறது.

இதன் மூலம் முழு உரிமை கொண்ட சில்லறை உணவு விற்பனை, தயாரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம். கடைகள் மூலமோ அல்லது ஆன்லைன் மூலமோ விற்பனை செய்யலாம். அமேசான், க்ரோஃபர்ஸ், பிக் பாஸ்கட் ஆகிய 3 நிறுவனங்கள் 695 மல்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு திட்ட அறி க்கையை சமர்ப்பித்திருந்தன.

எனினும் அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான அமேசான் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. க்ரோபர்ஸ், பிக் பாஸ்கட் நிறுவனங்கள் ஆன்லைனில் மளிகை விற்பனையை மேற்கொள்ளவுள்ளது. அமேசான் 500 மில்லியன் டாலரை முதலீடு செய்கிறது.