டில்லி

ந்த மாதம் 1 முதல் 9 ஆம் தேதி வரை நடந்த  வங்கிக்கடன் விழாவில் அரசு வங்கிகள் ரூ.81781 கோடி கடன் வழங்கி உள்ளன.

நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு வங்கி தலைமை அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.   அந்த சந்திப்பில் பொருளாதார மேம்பாடு குறித்து விவதிக்கபட்டுள்ளதக தெரிய வந்துள்ளது.  அப்போது வர்த்தகங்களை ஊக்குவிக்க வங்கிகள் பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு கடன்கள் வழங்க வேண்டும் என அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்குக் கூறி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் நிதிச் செயலர் தெரிவிக்கையில், “வங்கிகளிடம் தற்போது போதுமான நிதி உள்ளதால் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் கடன்களை வழங்கலாம் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல பெரிய நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகைகளை வசூல் செய்து இந்த கடன்களை வழங்கலம் எனவும் அவர் கூறினார்.  வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்க இந்த மாதம் 1 முதல் 9ஆம் தேதி வரை வங்கிக் கடன் விழா நடந்தது.   இந்த விழாவில்   ரூ.81781 கோடி அளவுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ரூ.34342 கோடி புதிய தொழில் முனைவோருக்கு வழங்கபட்டுள்ள்து.  இதற்கான விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டுள்ளன.  தற்போதுள்ள பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த வங்கிக்கடன் விழாக்கள் நடத்தப்படுகின்றன.   அடுத்த வங்கிக்கடன் விழா தீபாவளிக்கு முன்பு அக்டோபர் 21 முதல் 25 வரை நடக்க உள்ளது” எனக் கூறி உள்ளார்.