டில்லி

கட்டுமானங்களில் அனைத்து உட்கட்டமைப்புக்கும் கட்டிடத்துக்கு வசூலிக்கும் அதே விகிதத்தில் ஜி எஸ் டி வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான துறைக்கான ஜி எஸ் டியை குறைக்க வேண்டும் என வெகுநாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியாகி இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமுலுக்கு வந்துள்ளன. முன்பு 18% ஆக இருந்த ஜி எஸ் டி தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஜிஎஸ்டி வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் உள்கட்டமைப்பான வண்டிகள் நிறுத்துமிடம் போன்றவைகள் அமைக்க கட்டுமான நிறுவனங்கள் பழைய விகிதத்தில் 18% ஜி எஸ் டி வசூலித்து வந்தன. இதற்கு அரசு முன்ன்றில் ஒரு பங்கு தள்ளுபடி அளித்ததால் வீடு வாங்குவோர் 12% ஜி எஸ் டி செலுத்த வேண்டி இருந்தது.

தற்போது வெளியாகி உள்ள அரசு அறிவிப்பில் அனைத்து உள் கட்டமைப்புக்களுக்கும் கட்டிடத்துக்கு விதிக்கப்படும் அதே விகித ஜி எஸ் டி மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5% ஜி எஸ் டி மட்டுமே அனைத்து உள்கட்டமைப்புக்களுக்கும் வசூலிக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பு வீடு வாங்குவோருக்கு நல்லதாக அமையும் என கூறப்படுகிறது.