புற்று நோய்க்கான 42 மருந்துகள் விலை கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன

டில்லி

புற்று நோயை குணமாக்கும் 42 மருந்துகளை விலை கட்டுப்பாட்டின் கீழ் அரசு கொண்டு வந்துள்ளது.

தேசிய மருந்துகள் விலை ஆணையம் கடந்த 2013  அன்று முக்கியமான பல மருந்துகளை விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டம் இயற்றியது.   இதன் மூலம் பல உயிர்காக்கும் மருந்துகள் இந்த கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.   இது வரை இந்த பிரிவின் கீழ் 1000 மருந்துகளுக்கு மேல் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த விலைக் கட்டுப்பட்டின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ள மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கின்றன.   அவ்வகையில் புற்று நோயககன 42 மருந்துகளை ஆணையம் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.   ஏற்கனவே 57 புற்று நோய்க்கான மருந்துகள் இந்த கட்டுப்பாட்டின் கிழ் உள்ளன.   இதன் மூலம் இந்த மருந்துகள் 30% லாபத்துக்கு மேல் விற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 42 மருந்துகளின் கலவையில் தற்போது 355 பெயரில் மருந்துகள் விற்பனை ஆகி வருகின்றன.  இந்த உத்தரவின் மூலம்  இவைகளின் விலைகள் சுமார் 85% வரை குறைய வாய்ப்புள்ளது.    இதனால் நோயாளிகளுக்கு ரூ.105 கோடி வரை பணம் குறைவாக செலவாகும் என கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 85% price reduction, 85% விலை குறைப்பு, anti cancer drugs, govt order, price control, அரசு உத்தரவு, புற்று நோய்கான மருந்துகள், விலைக் கட்டுப்பாடு
-=-