Random image

ரபேல் விளைவு : அதானிக்கு அளிக்கவிருந்த ரஷ்ய ஒப்பந்தம் ரத்து

டில்லி

தானி குழுமத்துடன் ஆறு லட்சம் ஏகே ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்ய இருந்த ரஷ்யாவின் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க காங்கிரஸ் அரசு பேரம் பேசியது.   அந்த விமானங்களை அதிக விலை கொடுத்து பாஜக அரசு வாங்க ஒப்பந்தம் இட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.  மேலும் இந்த விமானங்களின் பராமரிப்பு பணி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அம்பானியின் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் ரஷ்ய அரசும் இந்திய அரசும் ஏகே ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய பேச்சு வார்த்தைகள் நடத்தின.  ரஷ்யாவின் நிறுவனம் இந்த துப்பாக்கிகளை இந்தியாவின் அதானி குழுமத்துடன்  ஒப்ப்பந்தம் செய திட்டமிட்டிருந்தது.   அரசின் கொள்கையான மேக் இன் இந்தியா என்பதன் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அப்போது கூறப்பட்டது.

இவ்வகையில் ஆறு லட்சம் ஏகே 103 ரக துப்பாக்கிகள் வாங்க அரசு ஒப்புக் கொண்டது.  இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரஷ்ய பயணத்தின் போது தொடங்கபட்டது. அப்போது இந்திய பாதுகாப்பு தொழிற்சாலைகள் ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இந்த துப்பாக்கிகளை உற்ப்பத்திசெய்யபடும் என கூறப்பட்டது.   அதன் பிறகு அரசுத் துறையிடம் போதிய வசதி இல்லாததால் அது அதானி குழுமத்துக்கு மாற்றப்பட்ட்து.

தற்போது ரபேல் விமான கொள்முதலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பை தொடர்ந்து நாடெங்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  அதன் விளைவாக மத்திய அரசு இந்த ரஷ்ய துப்பாக்கி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது  அத்துடன் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே இனி பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.