Random image

மக்கள் எதிர்ப்பின் எதிரொலி : 8 வழி சாலை 6 வழி சாலை ஆகியது

சென்னை

க்களின் எதிர்பை தொடர்ந்து சென்னை – சேலம் 8 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சேலத்துக்கு இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணயம் முடிவு செய்தது.   இந்த சாலை ரூ.10000 கோடி செலவில் 277 கிமீ தூர சாலையாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இந்த சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீட்டர் தூரமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கி.மீட்டர் தூரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீட்டர் தூரமும், தர்மபுரி மாவட்டத்தில் 53 கி.மீட்டர் தூரமும், சேலம் மாவட்டத்தில் 38 கி.மீட்டர் தூரத்தில் அமைய இருந்தது.

இந்த சாலை அமைக்க 120 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளிட்ட 2500 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த இருந்த போது இந்த சாலை அமைக்க விளை நிலமும் வனப்பகுதியிம் அழிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.   ஆயினும்  நிலம் கையக்ப்படுத்தும் பணியில் அரசு அதிகாரிகள் தொட்ர்ந்து ஈடுபட்டனர்.   இதை எதிர்த்து விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தர்ப்பினரும் போராடினர்.

இந்நிலையில் இந்திய நெடுஞ்சாலை ஆணையம், “இந்த சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.  மொத்த தூரமான 277 கிமீ தூரத்தை குறைக்காமல் மாற்றம் செய்யப்பட்டுள்ள்து.  வனப்பகுதியில் 13.9 கிமீக்கு பதில் 9 கிமீ தூரமே சாலை அமைக்கப்பட உள்ளது.  அதனால் 120 ஹெக்டேர் வனப்பகுதிக்குபதில் 45 ஹெக்டேர் வனப்பகுதி மட்டுமே கையகப்படுத்த உள்ளது. இந்தப் பகுதியில் 8 வழி சாலைக்கு பதிலாக தற்போது 6 வழிச்சாலை அமைக்க உள்ளது.: என தெரிவித்துள்ளது.