ஜம்மு காஷ்மீர் விவகாரம்: 5 மத்தியஅமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு

டில்லி:

ம்மு காஷ்மீர் விவகாரத்தில், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய 5 மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இது அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசங்கள் நடைமுறைக்கு வர இருக்கிறது.. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர்  அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.  அங்கு வரலாறு காணாத அளவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில வளர்ச்சி குறித்து ஆராயவும், பரிந்துரை செய்யவும், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவார் சந்த் கெஹ்லோட், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பி.எம்.ஓ அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர், 370 வது பிரிவை ரத்து செய்யப்பபட்ட நிலையில்,  மாநிலத்தின் உள்ள பிரச்சினை கள் மற்றும்,,  யூனியன் பிரதேசங்களுக்குள் பிரிக்கப்பட்டதும் அங்குள்ள பிரச்சினைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ‘ ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இரண்டு யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள், யூனியனில் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, இந்த குழு பரிந்துரைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சர்கள் கொண்ட குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தலைநகர் வட்டார தகவல்கள்  தெரிவிக்கின்றன.