டில்லி:

நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்குவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக ஸ்வராஜ் அபியான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர் ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகுர், ரமனா ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘‘இந்த பிரச்னை தொடர்பான உண்மை விபரங்களை 4 வாரத்தில் தெரிவிக்கப்படும்’’ என்று மத்திய அரசின் வக்கீல் வேணுகோபால் பதில் மனு மூலம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும், விசாரணையின் போது, ‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ஐ மாநில உணவு ஆணையங்கள் கட்டாயப்படுத்தியுள்ளது. அதனால் இந்த திட்டத்தை வறட்சி பாதித்த மாநிலங்கள் மட்டுமின்றி இதர மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மனுதாரின் மனுவில்,‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது இன்னும் பெரும் சவாலாக உள்ளது. நூறு நாள் வேலை திட்டத்துக்கு போதுமான பணிகளை மாநில அரசுகள் வழங் குவதில்லை.

உ.பி., கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, சட்டீஸ்கர் ஆகிய 12 மாநிலங்கள் வறட்சியால் பாதித்துள்ளது. இதற்கு உரிய நிவாரணங்களை அதிகாரிகள் வழங்கவில்லை. வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.