சங்கிலி கட்டி இழுத்துச்செல்லப்பட்ட அரசு டாக்டர்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்த சுதாகர் , கொரோனா உச்சம் தொட்டபோது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர்.

அரசு மருத்துவமனைகளில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஒரே முகக்கவசத்தை 15 நாள் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதாகக் கூறியதால், சுதாகர சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குடிபோதையில் நடுரோட்டில் கலாட்டா செய்ததாக டாக்டர் சுதாகரை போலீசார் அடித்து உதைத்துள்ளனர்.

மேலும் அவரது கைகளை பின் புறமாக இரும்பு சங்கிலியால் கட்டி தரதரவென  ரோட்டில் இழுத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.

முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் சுதாகர் , பின்னர் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

’முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவர் மோசமாகத் திட்டினார். ‘’ என விசாகப்பட்டினம் காவல்துறை ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.

‘’ டாக்டர் சுதாகரை தாக்கிய போலீசாரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்ட-

‘’அந்த டாக்டர் தெலுங்கு தேசம் அனுதாபி. அவரை சந்திரபாபு நாயுடு தூண்டி விட்டுள்ளார்’’ என்று   ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்