சென்னை

மிழகத்தில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் இறுதித் தேர்வை ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டாம் என அரசு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

                                                          மாதிரி புகைப்படம்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு இறுதித் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு மருத்துவர்கள் இந்த தேர்வை ஆகஸ்ட் மாதம் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   இதுகுறித்து அவர்கள், “தேர்வு எழுத உள்ள பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா சிகிச்சைப் பணியில் மும்முரமாகச் சேவை செய்து வருகின்றனர்.

அதனால் இவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் களைப்பு அடைந்துள்ளனர்.   இதனால் அவர்களுக்குத் தேர்வுக்கு படிக்க நேரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தேர்வுகளுக்குத் தயாராக போதுமான கால அவகாசம் அளிக்காமல் தேர்வு நடத்துவது நியாயம் அல்ல” எனத் தெரிவித்துள்ளனர்.