சோனியா, ராகுல், பிரியங்கா பாதுகாப்பை குறைத்த மத்திய அரசு! காங்கிரசார் அதிர்ச்சி

டெல்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின்  பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் குறைத்து உள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி எனப்படும் உயர்ரக பாதுகாப்பை நீக்கி விட்டு சாதாரண இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்பட முக்கியதஸ்ர்களின் பாதுகாப்பை மத்திய அரசசின் எஸ்.பி.ஜி. எனப்படுத் சிறப்பு பாதுகாப்பு படையினர் கவனித்து வருகின்றனர். இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய மோடி அரசு  முடிவு செய்துள்ளது. அதன்படி,  இனி பிரதமர் மற்றும் அவரது குடும்பத்திற்கு மட்டுமே, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு தரப்படும்; முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு கிடையாது என, சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த சட்ட திருத்தம், விரைவில் கூட உள்ள பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற பா.ஜ. அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில்,  முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது.

இந்த நிலையில், இன்று, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியாகாந்தி மற்றும் அவரது மகன் ராகுல்காந்தி, பிரியங்கா வதேராவுக்ஊகு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி., பாதுகாப்பை  திருப்ப பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

மோடி அரசின் இந்த நடவடிக்கை . ‘பழி வாங்கும் நடவடிக்கை என, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.