4 ஆண்டுகளில் 4880 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவு செய்துள்ள மோடி அரசு

டில்லி:

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில்  4880 கோடி ரூபாய் விளம்பரத்திற் காக மட்டும் செலவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு (2018-19) விளம்பர செலவுக்காக ரூ.162,83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்ற மேலவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் தெரி வித்த மாநிலங்களுக்கான தகவல் ஒளிபரப்பு த்துறை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறி உள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்துவதற்காக  கடந்த 2014-15ம் ஆண்டு முதல் இதுவரை  மத்திய அரசு 4800 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

தகவல் ஒளிபரப்பு த்துறை மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்

இந்த விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள செய்தித்தாள்கள், எலகட்ரானிக் ஊடகங்கடள, தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவற்றில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 2014-15ம் ஆண்டு முதல் 2017-18ம் ஆண்டு வரை  விளபரத்திற்காக  ரூ.4800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ள அமைச்சர், 979.78 கோடி  ரூபாய் கடந்த 2014-15ம் ஆண்டும், ரூ.1,160,16 கோடி ரூபாய் 2015-16ம் ஆண்டிலும், 1,264,26 கோடி ரூபாய் 2016-17ம் ஆணடிலும், 1,313,57 கோடி ரூபாய், 2017-18ம் ஆண்டும் செலவிடப்பட்டுள்ளதுஎன்று ஆண்டு வாரியாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2018-19ம ஆண்டுக்காக ரூ.162,83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ள  அவுட்ரீச் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பீரோ  (Bureau of Outreach and Communication) மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரியின் பாஷல் பிமா யோஜனா, சுவாச் பாரத், ஸ்மார்சிட்டி திட்டம், ஷான்சட் ஆதர்ஷ் கிராம் யோஜனா போன்ற திட்டஙளுக்காக 60.9442 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

உறுப்பினரின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், நாடு முழுவதும் உள்ள   867 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அரசின் விளம்பரம் ஒளிபரப்பு வழங்கப்படவில்லை என்றும், இவற்றும்  236 தனியார் டிவி நிறுவனங்களுக்கு பல்வேறு காரணங்களால் அரசின் விளம்பர  உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இவைகளில்,  147 டிவி சேனல்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக விளம்பரங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துஉள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 4 ஆண்டுகளில் 4880 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவு செய்துள்ள மோடி அரசு, 880 cr in ads since 2014-15: Rajyavardhan Rathore in Rajya Sabha, Govt has spent Rs 4
-=-