விளையாட்டுத்துறைக்கான முதல் தேசிய பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்

நாட்டின் விளையாட்டுத்துறைக்கான முதல் தேசிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் விளையாட்டுத்துறைக்கான முதல் தேசிய பல்கலைகழகம் அமைக்க ஒப்புதல் குடியரசு தலைவர் அளித்த நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Sports_

இந்த மசோதாவை விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பாலில் விளையாட்டு துறைக்கான தேசிய பல்கலைக்கழகம் அமைய உள்ளது. இதற்காக மணிப்பூர் மாநிலம் 325 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்றுநர் உள்ளிட்ட படிப்புகள் இந்த பல்கலைக்கழகம் மூலம் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவு தயார் செய்யப்பட்ட கடந்த ஆண்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பட்டது. அப்போது குடியரசு தலைவர் அளித்த ஓப்புதல் அளித்த நிலையில் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. தற்போது அதே பெயரில் மசோதா விளையாட்டுத்துறை அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

sport

மணிப்பூரில் அமைய இருக்கும் தேசிய பல்கலைக்கழகம் விளையாட்டுத்துறையில் சர்வதேச அளவில் பயிற்சிகள் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மணிப்பூர் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இதன் பயிற்சிகளை அளிக்கவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் உலகளாவிய நிலையில் சிறந்த கல்வியை வழங்கும் பொருட்டு விக்டோரியா பல்கலைக்கழகம், கான்பெர்ரா பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சி வசதிகள் மற்றும் ஆய்வு கூடங்கள் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்ததை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் வரவேற்கத்தக்க ஒன்றாகும். விளையாட்டுத்துறையில் திறமை வாய்ந்தவர்களை ஊக்குவிக்கவும், உருவாக்கவும் இந்த பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் விளையாட்டுத் துறையிலும் சிறந்த விளங்குவது அவசியாமான ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 65சதவிகித மக்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்களின் உடல்நலத்திற்கு ஏற்றார்போல் பயிற்சிகள் எடுக்க அரசு மேற்கொள்ளும் இது போன்ற நடவடிக்கைகள் வரவேற்கதக்கது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed