டில்லி:

ஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில்.  மக்கள் முதலீடு செய்துள்ள எல்ஐசி பணத்தை முதலீடு செய்து வீணடிப்பதா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி  மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

மோடியின் நிர்வாக திறமையற்ற ஆட்சி காரணமாக நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட தனது மோசமான பொருளாதார கொள்கைகளால் கடும் நிதி நெருக்கடியில் அரசு சிக்கி சீரழிந்து வருகிறது. இதை ஒப்புக்கொள்ளும் வகையிலேயே, மத்திய அரசு, பற்றாக்குறை பட்ஜெட்டையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வெளியிட்டது.

இந்த நிலையில், மக்கள் காப்பீடு செலுத்தி வரும், எல்ஐசியின் பணத்தை நஷ்டத்தில் இயங்கி வரும் நிறுவனங் களில் முதலீடு செய்து வருகிறது.  கடந்த 2014-15 மற்றும் 2018-19 ஆகிய காலகட்டங்களுக்கு இடையிலான நிதியாண்டுகளில், எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ.10.7 லட்சம் கோடிகளை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.

எல்ஐசி நிறுவனம் கடந்த 2018ம்ஆண்டு நஷ்டத்தில் இயங்கி வந்த ஐடிபிஐ வங்கியை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எல்ஐசி கையப்படுத்தி உள்ளது. ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை வாங்கி, வங்கியை தனது கட்டுப் பாட்டுக்குள், வைத்து, அந்த வங்கியை லாபகரமாக இயக்க முயற்சித்து வருகிறது. இதில் கோடிக்கணக்கான நஷ்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் மேலும் பல நஷ்டத்தில் இயங்கிவரும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. கடந்த இரண்டரை மாதங்களில்  மாதங்களில் ரூ.57,000 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து கடுமையான  இழப்பை சந்தித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  “சாமான்ய மக்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தில் தங்களின் பணத்தை எதிர்கால பாதுகாப்பு கருதி முதலீடு செய்கின்றனர். ஆனால், பாஜக அந்த முதலீடுகளை நஷ்டத்தில் செல்லும் நிறுவனங்களுக்கு மடை மாற்றுகிறது. நஷ்டத்தை ஏற்படுத்தும் இத்தகைய செயல் என்னமாதிரியான கொள்கை எனத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்ஐசி அடைந்து வரும் நஷ்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான்,   இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) கடந்த ஐந்து ஆண்டுகளில் “ஆபத்தான” பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதை இரட்டிப்பாக்கியுள்ளது என்று 11.94 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 22.64 லட்சம் கோடி ரூபாயாகக்அதிகரித்து உள்ளது என்று  ரிசர்வ் வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி தெரிவித்து உள்ளார்.