டில்லி

ரசு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் பங்குகள் விற்பனைக்காக மத்திய அரசு விலைப்புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அரசுக்குச் சொந்தமான எல் ஐ சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்,  ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களைத் தனியாருக்கு விற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   இதற்கு நாடென்க்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது   ஆனால் அரசு அதைக் கருத்தில் கொள்ளவில்லை.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 100% பங்குகளையும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு விற்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அடுத்ததாக பாரத் பெட்ரோலியம் கார்பரேஷனில் அரசிடம் உள்ள 42.98% பங்குகளை விற்க  அரசு முயன்று வருகிறது.  அதன் முதல் கட்டமாக இன்று அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில் “இந்திய அரசு தன்னிடம் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது.   அரசிடம் உள்ள 114.91  கோடி பங்குகள் மொத்த பங்குகளில் 52.98% அகும்.

இந்த பங்குகளை முழுமையாக வாங்குவோருக்கு இந்த நிறுவனத்தின் நிர்வாகம் முசிய்மையாக மாற்றப்பட உள்ளது.  இதற்கான விலை புள்ளிகளை அரசுக்கு வரும் மே மாதம் 2 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.   இதற்கான விண்ணப்பப் படிவங்கள் முதலீட்டுத் துறை மற்றும் பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.