ஜெயலலிதா படம் உண்டு ஆனால் திட்டமில்லை : கம்யூனிஸ்ட் வேதனை

சென்னை

மார்க்சிஸ்ட் கம்யூனிச் கட்சி தலைவர்ட் பாலகிருஷ்ணன் தமிழக அரசு ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பல திட்டங்களை கைவிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்.   கடந்த 2011 ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார்.   இவர் கடந்த 1973 ஆம் ஆண்டு தனது மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பாலகிருஷ்ணன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை கடுமையாக சாடி உள்ளார்.  அவர், “ஜெயலலிதாவின் ஆட்சியின் போது தாலிக்கு தங்கம், ஓய்வூதிய திட்டம் மற்றும் அம்மா உணவகம் போன்ற நலத் திட்டங்களை அறிமுகம் செய்தார்.   ஆனால் அவர் மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஜெயலலிதா அற்முகம் செய்த தாலிக்கு தங்கம், ஓய்வூதிய திட்டம்,  மற்றும் அம்மா உணவகம் போன்ர நலட்திட்டஙக்ளை அரசு சரியாக செயல்படுத்தவில்லை.   இது ஜெயலலிதா அரசு எனக் கூறி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் வைத்து இந்த அர்சு ஆட்சி செய்துக் கொண்டு ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தாதது வேதனை அளிக்கிறாது” என கூறி உள்ளார்.