10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 முகக் கவசம் இலவசம்

சென்னை

த்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கட்டுடன் 2 முக கவசங்கள் இலவசமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்கம் தீர்மானித்துள்ளது.

 

வரும் ஜூன்  15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.  இதைப் போல் 11 ஆம் வகுப்பு தேர்வு 11ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பில் மீதமுள்ள தேர்வுகள் 18 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.   இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கட்டுகளை இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நாளை பிற்பகல் முதல் தேர்வு மையத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள்தல கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வீடுகளில் ஹால் டிக்கட்டுகள் வழங்கப்பட உள்ளன.   வெளியூரில் இருந்து வந்து தனிமைபடுத்த பட்டோருக்கும் நேரில் ஹால் டிக்கட்டுகள் வழங்க உள்ளது.

பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  எனவே தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கட்டுடன் இரு முகக் கவசங்கள் வழங்க அரசு தீர்மானித்துள்ளது.  அதையொட்டி பள்ளிகளுக்கு 46.5 லட்சம் முகக் கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

You may have missed