குடியுரிமையை கைவிடும் இந்தியர்களுக்கு மத்திய அரசு புது உத்தரவு

டில்லி

ந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியர்கள் பலர் படிப்பு மற்றும் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகள் அந்த நாடுகளில் தவ்குவதால் அவர்களுக்கு அந்நாட்டின் குடியுரிமை கிடைத்து விடுகிறது என்பதால்  இந்திய குடியுரிமையை கைவிட்டு விடுகின்றனர். இது குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி இந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அத்துடன் வெளிநாட்டு குடியுரிமை பெற வேண்டியதன் அவசியத்தையும் இந்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த விதிகள் இந்தியர்களின் வெளிநாட்டு குடியுரிமை பெறுவதற்கு தடை செய்ய இல்லை எனவும், இந்திய குடியுரிமையை கைவிடுவதற்கான சரியான காரணங்களை தெரிந்துக் கொள்ள மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ”வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கு குடியேறிய இந்தியர்களுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் என்னும் அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. இனி அந்த அட்டை வைத்துள்ளவரை திருமணம் செய்வோருக்கு அதே போல் அட்டை அளிக்கப்படும். மற்றும் அவர்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்ல வசதியாக வாழ்நாள் விசா வழஙக்படும்” எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Govt issued a new rule for renouncing Indian citizenship
-=-