எச் ஐ வி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண் கண்ணீர் புகாரும் அமைச்சர் பதிலும்

சாத்தூர்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச் ஐ வி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசு வேலை அளிக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விருது நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மறுத்துவமனையில் ஒரு கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்கு வந்தார்.  அவருக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது.   அதை ஒட்டி அவருக்கு ரத்த வங்கியில் இருந்து வாங்கப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச் ஐ வி வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.  தற்போது அந்த வைரஸ் கர்ப்பிணிப் பெண் உடலில் பரவி உள்ளது.     இதை ஒட்டி ரத்த வங்கி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யபட்டனர்.    பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது அந்த கர்ப்பிணிப் பெண் கண்ணீருடன், “நான் சிறு வயதில் இருந்தே ஒரு ஊசி கூட போட்டுக் கொண்டது இல்லை.   இந்த எச் ஐ வி தொற்று மற்றவர் ரத்தம் ஏற்றப்பட்டதால் எனக்கு உண்டாகி இருக்கிறது.    இதனால் என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைப்பதாக நான் உணர்கிறேன்.   இவ்வாறு செய்ததற்கு பதில் என்னை ஒரேயடியாக கொன்றிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழக அரசு பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மற்றும் அவர் கணவருக்கு அரசு வேலை வழங்க உள்ளது.   அந்தப் பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: complaint, Govt Job, HIV affected blood, Pregnant woman, rajendra balaji
-=-