கொரோனாவுக்கு எதிரான போரில், பெரியளவிலான பண பரிமாற்ற திட்டம் துவக்கம்

புதுடெல்லி:

ரடங்கு கால சிறப்பு நிவாரணமாக 4 கோடி ஏழைப்பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு 25-ந் தேதி முதல் அமல்படுத்தியது.

இதன் காரணமாக சாதாரண கூலி தொழிலாளர்கள் தொடங்கி அனைத்து தொழில் துறையினரும், வியாபாரிகளும், தனியார் துறையினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

பலதரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 26-ந் தேதி ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நிதி உதவி திட்டங்களை அறிவித்தார்.

அப்போது அவர், ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள ஏழைப்பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய) மாதம்தோறும் ரூ.500 சிறப்பு நிவாரணம் வழங்கப்படும்; இந்த தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என குறிப்பிட்டார்.

ஊரக வளர்ச்சித்துறையால் விடுவிக்கப்படுகிற இந்த நிவாரண உதவித்தொகை, ஏப்ரல் மாதம் முதல் வார இறுதியில் 20 கோடியே 39 லட்சம் பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 7 லட்சம் ஏழைப்பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் தலா ரூ.500-ஐ மத்திய அரசு செலுத்தியது.

வங்கி கணக்குகளுக்கு ஏப்ரல் 4 மற்றும் 5 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்., 7ம் தேதியும் பணம் செலுத்தப்படும். 6 மற்றும் 7 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்.,8ம் தேதியும், 8 மற்றும் 9 என முடியும் வங்கி கணக்குகளுக்கு ஏப்.,9ம் தேதியும் பணம் செலுத்தப்படும். 9ம் தேதிக்கு பிறகு, பயணாளிகள் தாங்கள் விருப்பப்பட்ட நாளில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வங்கி சங்கம், ‘வங்கி கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதால், பணத்தை எடுக்க பயனாளிகள் அவசரப்பட தேவை இல்லை. எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலா

கார்ட்டூன் கேலரி