Random image

ஐஆர்சிடிசி க்கு கவர்ச்சியாக பெயர் மாற்ற அரசு ஆலோசனை : பியூஷ் கோயல்

டில்லி

ந்திய ரெயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி க்கு வேறு ஒரு கவர்ச்சியான பெயரை சூட்ட ஆலோசித்து வருவதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்..

 

இந்திய ரெயில்வே தனது டிக்கட்டுகள் ஆன்லைன் விற்பனை, ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில்  உணவுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல சேவைகளை ஐஆர்சிடிசி மூலம் செய்து வருகிறது.    இந்திய ரெயில்வே கேடரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் என்னும்  ஆங்கிலப் பெயரின் சுருக்கமே ஐஆர்சிடிசி ஆகும்.

இந்தப் பெயர் மிகவும் சாதாரணமாகவும் ஆன்லைன் டிக்கட் வர்த்தகம் செய்யும் நிறுவனத்துக்கேற்றபடி கவர்ச்சியாக இல்லை எனவும் பொதுவான கருத்து நிலவி வருகிறது.   இதே போல் இருந்த பல அரசு நிறுவனங்களின் பெயர்களை மத்திய அரசு மாற்றி உள்ளது.

இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “ஐஅர்சிடிசி என்னும் பெயர் கவர்ச்சியாக இல்லாதது மட்டும் இன்றி மனதிலும் நிற்காத ஒரு பெயராக உள்ளது.    இந்தப் பெயரை நானே சில நேரங்களில் மறந்து விடுகிறேன்.  அதனால் மனதைக் கவரும் மற்றும் எளிதில் நினைவுக்கு வரும் வேறொரு பெயரை வைக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரெயில்வே துறை ஒரு சில பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.  அதில் “ரெயில் யாத்ரா” என்னும் பெயருக்கு அதிக வரவேற்பு உள்ளதாக ரெயில்வேத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   ஆயினும் இன்னும் எளிதான மற்றும் மக்களைக் கவரும் பெயர் குறித்து ஆலோசனை தொடர்வதாகவும் அவர் கூறி உள்ளார்.