ஆதார் – சிம் கார்டு இணைப்பை எளிமையாக்கி உள்ள அரசு

டில்லி

சிம் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை அரசு எளிமையாக்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆதார் எண் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.  பான் கார்டு, வங்கிக் கணக்குகள், கேஸ் இணைப்பு, ரேஷன் கார்டு போன்ற பலவற்றுக்கு ஆதார் எண் இணைப்பு அவசியமாகி உள்ளது.  வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் சிம் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தற்போது அரசு கூறி உள்ளது.

அந்த இணைப்பை சுலமபாக செய்ய அரசு தற்போது எளிமையான வழிமுறைகளை அறிவித்துள்ளது.  அதன் படி முதியோர், உடல் ஊனமுற்றோர், போன்றோருக்காக விடுகளுக்கு சென்று ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என அரசு மொபைல் நிறுவனங்களுக்கு ஆணை இட்டுள்ளது,  அதற்கான ஆன்லைன் வழிமுறைகளை ஏற்படுத்த மொபைல் நிறுவனங்கள் அரசை கேட்டுக் கொண்டது.

தற்போது அரசின் அறிவிப்பின் படி ஆதார் நிறுவனத்தில் இருந்து ஒரு ஓ டி பி (ஒருமுறை உபயோகிக்கத் தகுந்த கடவு எண்) மொபைலுக்கு குறும் செய்தி மூலம் அளிக்கப்படும்.  அந்த ஓ டி பி மூலம் ஒரு ஆதாருடன் இணைக்க வேண்டிய அனைத்து சிம் காருட்களையும் இணைக்க முடியும்.   அதே நேரத்தில் ஆதார் இயந்திரம் மூலம் இணைப்பவர்களுக்கு விரல் ரேகை வைத்தால் அனைத்து விவரங்களும் மொபைல் நிறுவனங்களுக்கு தெரியாத வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதுவரை சுமார் 50 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.   மேலும் இனி புதிய சிம் கார்டுகள் வாங்குவோர் ஆதார் எண் சமர்பித்த பின்பே வழங்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.    இந்த இணைப்பு குறிப்பிட்ட மார்ச் 2018க்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.