டில்லி

தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வரவு செலவு கணக்கை காட்டாத 6000 தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு உதவி பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது

கடந்த நவம்பர் 2016ல் சுமார் 11000 தொண்டு நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வரவு செலவு கணக்கை காட்டவில்லை என்றும் அவைகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.  அதைத் தொடர்ந்து சுமார் 3500 தொண்டு நிறுவனங்கள் கணக்கை அரசுக்கு அளித்தன.  அவைகளை அரசு பரிசீலித்து வருகிறது.

மீதமுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு, அரசு ஒரு ஷோ காஸ் நோட்டிஸ் ஒன்றை கடந்த ஜுலை 8ஆம் தேதியன்று கணக்கு காட்டாததற்கு காரணம் கேட்டு அனுப்பியது.  அதன் கெடு ஜுலை 23 உடன் முடிவடந்தது.  அதன்படி அதற்கு பதிலளிக்காத 6000க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டுப் பணம் பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி மேற்படி உரிமம் ரத்து செய்யப்பட்டால் அந்த நிறுவனங்களால் வெளிநாட்டில் இருந்து எந்த உதவியும் பெற முடியாது.  பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு உதவியுடன் மட்டும் செயல்படுவதால் அந்த நிறுவனங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்படும் என தெரிகிறது.