டில்லி

ன்லைன் மூலம் பேமெண்ட் செய்பவர்களுக்கு பாதுகாப்பு கட்டண விதிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை அமுலாக்கப்பட்ட உடன் ரொக்கமற்ற பரிவர்த்தனையும் அதிகம் ஆனது.     இதில் வங்கிகள் மூலமாக மட்டுமின்றி பல தனியார் இணையதளங்களும் இதே சேவையை தொடங்கின.   சில அரசு இணையங்களும் சேவையைத் தொடங்கின.  நன்கு சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு தடங்கல் போல் இதன் மூலம் பல ஏமாற்று வேலைகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மெல்ல மெல்ல தற்போது ஆன்லைன் பேமெண்ட் குறைந்து மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனை அதிகமாகி உள்ளது.   இதற்கு முக்கிய காரண வங்கி மற்றும் அந்த தளங்கள் வசூலிக்கும் கட்டணங்களே ஆகும்.    அத்துடன் ஏமாற்று வேலைகளும் அதிகமாகி வருவதால் மக்களுக்கு ஆன்லைன் பர்வர்த்தனையின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது.  இது பற்றி அரசுத் துறை செய்தி ஒன்று, “ஆன்லைன் ஏமாற்று வேலைகள் ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை குறி பார்த்தே நடத்தப்படுகின்றன. இது பற்றி சென்ற  கணக்காண்டு 2014-15ல் 13083 புகார்கள் வந்துள்ள நேரத்தில் 2015-16ஆம் ஆண்டுல் 16468 புகார்கள் வந்துள்ளன.” என கூறுகிறது.

இது குறித்து நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, புலனாய்வுத்துறை, தொலைதொடர்புத் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தினர்.  அதில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த முறைகேடுகள் நடைபெறாவண்ணம் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.   இந்த கட்டணம் அமுலுக்கு வந்தால் ரொக்கமற்ற பரிவர்த்தனை என்பது இன்னும் செலவாகும் என தெரிய வருகிறது.

தற்போது உலக நாடுகளில் சுவீடனில்தான் ரொக்கமற்ற பரிவர்த்தனை அதிகம் நடைபெறுகிறது.  அங்கு 98% ரொக்கமற்ற பரிவர்த்தனைகளே நடைபெறுகின்றன.   இந்தியாவில் பணமதிப்பீட்டு நடவடிக்கை துவங்கியதும் அதிகரித்த ரொக்கமற்ற பரிவர்த்தனை நடவடிக்கைகள் மும்மடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் அது இரு மடங்குக்கும் குறைவாகவே அதிகரித்துள்ளது.