சென்னை:

ய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டம் வரும் 2020ம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்றைய  கேள்வி நேரத்தின்போது, கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ. க.அன்பழகன்  ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் பதில் அளித்து பேசியதாவது,

ஓய்வூதியத்தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்  முதல் கட்டமாக கடந்த 2014-ல் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டு 2018-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.2லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் இந்த திட்டம் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை சில சிறப்பு அம்சங்களுடன்  நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் என  மொத்தம் 114 வகையான சிகிச்சை பெறலாம், அதற்காக ரூ. 4 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார்..

இந்த திட்டத்தின்கீழ் தற்போது 7.30 லட்சம் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இணைந்து இருப்பதாக தெரிவித்தவர்,  இதற்கு காப்பீடு கட்டணமாக மாதந்தோறும் ரூ.350 பிடித்தம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த புதிய திட்டத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்பட முக்கிய சிகிச்சை பெற உச்சவரம்பு ரூ.7.50 லட்சம் வரை உயர்த்தப்பட்டு  இருப்பதாக கூறியவர்,  இந்த திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் எம்.டி. இந்தியா நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.