டெல்லி:  தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும், அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என சீரம் மருந்த தயாரிப்பு நிறுவனத் தலைவர் அதார் பூனவல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  ரஷியா, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் பொதுமக்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியஅரசிடம் விண்ணப்பித்து உள்ளன.

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில்  சீரம் நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிறுவனத்தில்,  ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. சோதனை சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தடுப்பூசி தயாரிப்பாளர்களை வழக்குகளுக்கு எதிராக அரசு பாதுகாக்க வேண்டும் என  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா  மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தடுப்பூசி வளர்ச்சிக்கான சவால்கள் குறித்த மெய்நிகர் குழு விவாதத்தின் போது கருத்து தெரிவித்த பூனவல்லா,  தடுப்பூசியினால்,  சிலருக்கு ஏதேனும் மோசமான,  பாதகமான எதிர்வினைகள்  ஏற்பட்டால், அதில் இருந்து பாதுகாக்கப்படும் வகையில், ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.  ஏனெனில் இது சட்ட சிக்கல்களை எதிர்கொள்வதை விட தடுப்பூசிகளை உருவாக்கி உற்பத்தி செய்வதில் நிறுவனங்கள் கவனம் செலுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

“கடுமையான பாதகமான விளைவுகளுக்கான வழக்குகள் அல்லது வேறு எந்த அற்பமான உரிமைகோரல்களுக்கும் எதிராக தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை,  தடுப்பூசி உற்பத்தியாளர்களை திவாலாக்கும் அல்லது அவர்கள் நாள் முழுவதும் வழக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும். அதில் இருந்து தடுப்பூசி தயாரிப்பாளர்களை பாதுகாக்க  இதுபோன்ற சட்டங்கள்  மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தி உள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? ரூ.100 கோடி இழப்பீடு கோரி தன்னார்வலர் மீது வழக்கு தொடர உள்ளதாக சீரம் நிறுவனம் மிரட்டல்…