அரசுப் பேருந்து ஜப்தி அடிக்கடி தொடர்கிறது!

 

துராந்தகம்

பேருந்து மோதி உயிரிழந்தவருக்கு இழப்பீடு கொடுக்காத காரணத்தினால் இன்று ஒரு அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் ஆனந்தன்.  இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் அரசுப் பேருந்து மோதி மரணம் அடைந்தார்.  மரணம் அடைந்த ஆனந்தனின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கில், அரசுப்பேருந்துக் கழக விழுப்புரம் டிவிஷன், ரூ.6.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

வருடங்கள் மூன்றாகியும் தொகையை வழங்காததால், குடும்பத்தினர் மீண்டும் நீதி மன்றத்தை நாடினர்.  நீதிபதி அரசு பஸ்ஸை ஜப்தி செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.  அதன்படி இன்று விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது/

அரசு பேருந்து ஜப்தி நடப்பது முதல் தடவை அல்ல, அடிக்கடி நடக்கும் நிகழ்வாகி விட்டது.

You may have missed