பெங்களூரு

ர்நாடக அரசு பிராமண சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளது.

இட ஒதுக்கீடு பெறச் சாதி சான்றிதழ் நாடெங்கும் அவசியமாக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவருக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால் உயர் சாதியினருக்கு அத்தகைய சான்றிதழ் அளிக்கப்படவில்லை.

மத்திய அரசு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாகி உள்ளது.

இந்த சலுகையைப் பெற வசதியாக கர்நாடக அரசு பிராமண சமூகத்தினருக்குச் சாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளது.

 

.