பெய்ஜிங்

சீனாவில் உள்ள கிறித்துவர்கள் ஏழைகள் நலத் திட்டம் பெற ஏசு படத்துக்கு பதில் சீன அதிபர் படத்தை மாட்ட வேண்டும் என வற்புறுத்தப் படுகிறார்கல் என ஒரு தகவல் வந்துள்ளது.

உலகில் உள்ள மதச் சார்பற்ற நாடுகளில் மிகவும் பெரிய நாடு சீனா ஆகும்.   இங்கு மற்ற மதத்தினருடன் கிறித்துவ மக்களும் பெருமளவில் வசித்து வருகின்றனர்.    மிகவும் ஏழ்மை நிலையில் பலர் வசித்து வருகின்றனர்.    அவர்களுக்கு சீன அரசு பல நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.   சமீபத்தின் சீனா நாட்டின் நாளிதழ் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்னும் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின் படி, “வீட்டின் உள்ளும் வாயிலிலும் இருக்கும் ஏசு கிறிஸ்துவின் படத்தை அகற்ற வேண்டும்.  அங்கு அதற்குப் பதில் சீன அதிபர் ஜின்பிங்கின் படத்தை வைத்தாக வேண்டும்.    அது மட்டும் இன்றி கிறித்துவ மத சின்னங்களான சிலுவை போன்றவைகள் எவையும் வீட்டினுள் இருக்கக் கூடாது.   அவைகளும் அகற்றப்படவேண்டும்.

ஏசு கிறிஸ்து எந்த ஒரு நிவாரணமும் சீனாவில் உள்ள ஏழை மக்களுக்கு அளிப்பதில்லை;   அவரால் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது.   எழைகளுக்கு நிவாரணம் அளித்து அவர்கள் ஏழ்மை நீங்க தீர்வு வழங்குவது ஜின் பிங் மட்டுமே.  அவர் படத்தைத்தான் மாட்ட வேண்டும் என அதிகாரிகள் ஏழைமக்களை வறுபுறுத்தி வருகின்றனர்”  என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நாளிதழில் ஏசு கிறிஸ்து மற்றும் கிறித்துவ மதச் சின்னங்களை அகற்றும் காட்சிகளும் படமாக வெளியிடப் பட்டுள்ளது.