குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை கூடாது: மத்திய அரசு!

 

Govt Opposes PIL That Seeks To Ban Convicted Criminal Politicians From Contesting Elections

குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க முடியாது என மத்திய அரசு மறுத்துள்ளது.

 

இதுதொடர்பாக பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளரான அஷ்வின் உபாத்யாய் என்பவர், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு உ:ச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கத் தேவையான அம்சங்கள், மக்கள் பிரதிநிதித்துவ்ச சட்டத்தில் உள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்ககப்ட்டது. மேலும், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது மனுதாரர் தெரிவிப்பது போல், சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம் என்ற அரசியல் சட்ட பிரிவிற்கு எதிரானது என்று கூற முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையமும், இந்தக் கோரிக்கையை நிராகரித்து உறுதிப் பத்திரம் ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குற்றப்பின்னணி உள்ளோரை அரசியலைவிட்டு அஅகற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் வழக்குத் தொடர்ந்த சொந்தக் கட்சிக்காரரின் கோரிக்கையினையே பாஜக தலைமையிலான மத்திய அரசு நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.