10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி : அரசு ஆலோசனை

டில்லி

ளைஞர்கள் இடையே நாட்டுப்பற்றையும் ஒழுக்கத்தையும் வளர்க்க 10 லட்சம் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இந்திய அரசு இளைஞர்கள் இடையே நாட்டுப்பற்றையும் ஒழுக்கத்தையும் வளர்க்க தேசிய இளைஞர் மேம்பாட்டு திட்டம் என ஒன்றை அமைத்துள்ளது.   இதில் வரும் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களும் கல்லூரியில் சேரும் மாணவர்களும் இணைக்கப் பட உள்ளனர்.   ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை  மற்றும் காவல்துறை ஆகிய இடங்களில் இந்த அமைப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.

இது குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகளும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் மற்றும் இளைஞர்கள் நலத் துறை அதிகாரிகளும் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.   அப்போது இந்த அமைப்பில் உள்ளோர் மட்டும் மேற்கண்ட துறைகளில் பணி அமர்த்துவது பற்றி விவாதிக்கபட்டுள்ளது.  இதற்கு பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது இந்த அமைப்பில் இணையும் இளைஞர்களுக்கு ஒரு வருட ராணுவப் பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.   ராணுவப் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை தரலாம் என யோசனை அளிக்கப்பட்டுள்ளது.  அரசு இது குறித்து மேலும் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காததால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்த பிறகு அரசு இவ்வாறு ஆலோசித்திருப்பது குறிப்பிடத்தக்கது