Random image

தேனா, விஜயா, பரோடா வங்கிகள் ஒன்றாக இணைகிறது….மத்திய அரசு முடிவு

டில்லி:

விஜயா பாங்க், தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா பாங்க் ஆகியவற்றை ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம் நாட்டின் 3வது மிகப்பெரிய வங்கியாக மாறவுள்ளது.

இது குறித்து நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில்,‘‘பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா பாங்க் ஆகிய 3 வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 3 வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் 3வது பெரிய வங்கியாக இருக்கும். இணைப்பு பணிகள் முடிவடையும் வரை தனித்தனியாகவே செயல்படும்.

வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் அதன் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேலும் மேம்படுத்த உதவும். வருங்கால தலைமுறையினருக்காக வங்கிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நேரம் இது’’ என்றார்.