டெல்லி: நுகர்வோர் மத்தியில் மின் கட்டண வேறுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த பரிந்துரை, பிற முன்மொழியப்பட்ட தேசிய கட்டணக் கொள்கை திருத்தங்களுடன், நுகர்வோரை மையமாக கொண்ட மிகப்பெரிய சீர்திருத்தமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. பொதுவாக, இந்தியாவில் உள்நாட்டு மின் கட்டணங்கள் குறைவு.

அதே நேரத்தில் உலகளவில் எடுத்துக் கொண்டோம் என்றால், தொழில்துறை கட்டணங்களும் மானியத்தின் காரணமாக மிக அதிகமாக காணப்படுகின்றன.

மின்னழுத்த அடிப்படையில் 6 வகைகளில் நுகர்வோரை கட்டணக் கொள்கை மாற்றப்படுகிறது என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். கொள்கையை இறுதி செய்யும் முன்பு ஆலோசித்திருந்தாலும், கொள்கையை செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்று மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன.

இது தவிர கட்டண கொள்கையில் மற்ற திட்டங்களுக்கும் பரிந்துரைகள் முன்மொழியப்பட உள்ளன. 24 மணி நேரம் மின்சாரம் உள்ளிட்ட மின் விநியோக நிறுவனங்களுக்கு சேவைகளை ஏற்படுத்துதல், 15% க்கும் அதிகமான வணிக இழப்புகளுக்கு தடை விதித்தல்  ஆகியவை அடங்கும்.

விவசாய மற்றும் கிராமப்புற நுகர்வோருக்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்வது, நுகர்வோர் மீதான மானியங்களை 4 ஆண்டுகளில் 20 சதவீதமாக குறைக்கவும் இந்த கொள்கையில் முன்மொழியப்பட உள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு  ஒப்புதல் அளித்துள்ள தேசிய கட்டணக் கொள்கையில் திருத்தங்கள் அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்களுக்கு இடையிலான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தேசிய கட்டணக் கொள்கையில் மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த கொள்கையானது ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில பயன்பாட்டின் அடிப்படையில் அல்லாமல், மின்னழுத்த அடிப்படையில் கட்டண வகைகளை பற்றி நாங்கள் முன்மொழிகிறோம். மின்னழுத்த அடிப்படையிலான கட்டண நிர்ணயம் தொழில்நுட்ப அடிப்படையில் இருக்கும், இது அளவிடக்கூடியது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.