சிலைக்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்த மோடி அரசு போலியோ தடுப்பூசிக்காக சர்வதேச அமைப்பிடம் உதவி கோரும் அவலம்!

--

டில்லி:

ர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை அமைக்க 3000 கோடி ரூபாய் செலவு செய்த மோடி அரசு, போலியோ தடுப்பூசிக்காக சர்வதேச அமைப்பிடம் நிதி உதவி கோரியிருப்பது பொருளாதார நிபுணர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், போலியோ  தடுப்பூசிக்காக இந்தியாவின் வரவு செலவு திட்டத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில், ரூ.100 கோடி அளவில் சர்வதேச நன்கொடையாளரின் உதவியை நாடி உள்ளது.

இந்திய அரசின் இந்த நிதி கோரிக்கை, இந்தியாவின் மோசமான நிதிநிலை ஒதுக்கீடை பிரதிபலிப்ப தாக உலக  சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் போலியோவை தடுக்கும் வகையில், குழந்தைகளுக்கு ஐபிசி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த திட்டம், இந்தியாவில் போலியோ இல்லாத நிலையை நிலைநிறுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு பொது நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

ஆனால், தற்போது  போலியோ தடுப்பூசியின் விலையேற்றம் மற்றும் வீரியமழிப்பு,  போலியோ தடுப்பூசியின் (IPV) உலகளாவிய விநியோக பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் மத்திய சுகாதாரத்துறை தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக  குழந்தைகளுக்கு ஐபிவி (IPV)  தடுப்பூசி போடப்படுவது நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், போலியோ தடுப்பூசியான ஐபிவியின் சானோஃபி நிறுவனம் ஒரே சீரான உலக ளாவிய விலை மதிப்பீட்டின் கீழ்  வைத்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இந்தியாவில், ஐபிவியின் விலை 2019 ம் ஆண்டில் 0.75 யூரோ (ரூ 61) விலிருந்து 1.81 யூரோ (147 ரூபாய்) வாகவும், 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 2.18 யூரோ (ரூ 177) வரை அதிகரிக்கும் என்று கூறி உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம், ஐபிவி தடுப்பூசி தொடர்ந்து நமது நாட்டிற்கு பற்றாக்குறையின்றி கிடைக்க ஜிஏவிஐ (Gavi) ன் தலையீட்டை நாடியுள்ளது. ஜிஏவிஐ அமைப்பு என்பது  ஏழை நாடுகளில் நோய்த்தடுப்பை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச அமைப்பாகும்.

போலியோ தடுப்பூசி பற்றாக்குறை குறித்து கருத்து தெரிவித்துள்ள  மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் ஹெல்த் ஸ்டடீஸ் பேராசிரியரான தியாகராஜன் சுந்தரராமன், தெரிவித்தார். “நாட்டின் சுகாதாரத்தில் முதலீடு செய்வது நாட்டின் பொருளாதார எதிர்கால முதலீடு என்றும்,  இதை ஒரு தனிப்பட்ட விஷயமாக கருதக்கூடாது என்றவர், ஒட்டுமொத்த சுகாதார பட்ஜெட் அதிகரிப்புக்கு அவசரத் தேவை உள்ளது,” என்று கூறி உள்ளார்.

மேலும், “இந்தியா அதன் சுகாதார வரவு செலவுத் திட்டத்தை அதிகரிப்பதற்கான திறனை கொண்டுள்ளது. ஆயுஷ்மன் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கான இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம்,  ஒரு சிலைக்கு அமைக்க செலவிட்டதைவிட குறைவாக உள்ளது,” எனவும் சாடி உள்ளார்.