டில்லி,

2024ம் ஆண்டுக்கள் மேலும் பல அணுஉலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கூறினார்.

பாராளுமன்ற  லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் இந்த தகவலை கூறினார்.

பாராளுமன்ற லோக்சபாவில் அணுமின்சாரம் குறித்து மத்தியமந்திரி ஜிதேந்திரா சிங் பேசிய தாவது,

“நாங்கள் 2014-ல் ஆட்சிக்கு வந்த போது, நாம் 10 ஆண்டுகளில், தற்போதுள்ள நிலையில் இருந்து  மூன்று மடங்கு, மின்சார உற்பத்தியை பெருக்குவோம் என்று கூறினோம்.  வரும் 2024ம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைவோம் என்றார்.

தற்போதைய அணுஉலைகளின் மூலமான மின்சார உற்பத்தி 4780 மெவாட் என்றும், இது 2024ம் ஆண்டுக்குள் 15000 மெகா வாட்டை எட்டும்.

பிரதமர்  நரேந்திர மோடியின் ஆட்சியில் அணுஉலைகள் சம்பந்தமான வேலைகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய அணுஉலைகள் அமைக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

வரும் 2024ம் ஆண்டுக்குள் நாட்டில் அதிக அளவு மின் தேவைகளை பூர்த்திசெய்ய,  தற்போது உள்ளதை விட மூன்று மடங்கு அதிகமான அணுசக்தி மின்சார அணு உலைகளை நிறுவ முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு தேவையான  மூலப்பொருளான யுரேனியம் தேவையான அளவுக்கு உள்நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலிருந்தோ பெற முடியும் என்று கூறினார்.

நம் நாட்டில் பீகார் மேகலயா போன்ற பகுதிகளில் யுரேனியம் கிடைப்பதற்கான வாய்ப்கள் உள்ளது உள்ளது, அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும்,  நாட்டில் முதல் முறை யாக பொதுத்துறையுடன் இணைந்து அணுஉலை மின்சாரம் தயாரிக்க இந்திய அணுமின் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்தித் துறை அணுஉலைகளில் யுரேனியத்துடன் தோரியம் இணைத்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.