தமிழக அரசு ஊழியர்கள் பண்டிகைகால முன்பணம் ரூ.10ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் உள்ள  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகைகால முன்பணம் ரூ.10ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் இதுவரை ரூ.5 ஆயிரமாக இருந்து வந்த நிலையில், நடப்பு ஆண்டு முதல் ரூ. 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கைத் தொடரில் பேசிய தமிழக  துணைமுதல்வர்  ஓ பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணத்தை 5,000  ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

தற்போது, அந்த  அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அரசாணை வெளியிட்டு உள்ளார் .