Random image

எச் ராஜா மீது நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை

சென்னை

காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றத்தை மோசமாக விமர்சித்த எச் ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை அரசு கேட்க உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் கூறி உள்ளார்

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலத்தின் போது எச் ராஜா காவல்துறை மற்றும் உயர்நீதிமன்றம் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பேசி உள்ளதாக வீடியோ பதிவு ஒன்று வைரலானது.   இதனால் சமூக வலைதளங்களில் பலரும் எச் ராஜாவின் இத்தகைய தரக்குறைவான வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஒட்டி அரசு  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் அரசை வற்புறுத்தி வருகின்றன.   இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்..   அந்த சந்திப்பில் அமைச்சர் ஜெயகுமார், “எச் ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறையை மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்துள்ளார்.

இதற்கு நீதிமன்றமே நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.   அத்துடன் அவர் காவல்துறை மீது மிக மிக மோசமாக விமர்சனத்தை முன் வைத்துள்ளர்.   அதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களில் ஆலோச்னையை அரசு கேட்க உள்ளது.   அவர்களுடைய ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.