கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள்: நாளை முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கும் மத்திய அரசு

டெல்லி: கொரோனா காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை முதல் துவங்க உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்குவது குறித்து அமைச்சரவையில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் வரை மக்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறைகளை அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

இது பற்றி துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலம் கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் விழிப்புணர்வு முகாமில், சமூக வலைதளம் முக்கிய அம்சமாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.