டில்லி:

ரசு பதவிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள்  பதவி உயர்வு பெற உச்சநீதி மன்றம் சில நிபந்தனைகளை விதித்து ஏற்கனவே தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார்.

எஸ்சி, எஸ்.டி. பிரிவிரினருக்கு ஆதரவாக இருந்த  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்,  குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.  வடமாநிங்களில்  நடைபெற்ற வன்முறையில்   11 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிய பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில்  இடஒதுக்கீடு கொண்டு வர முயற்சி எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து உச்சநீதி மன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து தீர்ப்பு கூறி உள்ள நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

மேலும் பாஜக அரசு அரசு தலித்துகளின் நலனுக்கு பாடுபட்டு வருவதாக கூறிய அமைச்சர், தேவைப்பட்டால்,  இந்த விவகாரத்தில்  அவசர சட்டமும் இயற்ற வாய்ப்புகள் உண்டு என்றும் கூறி உள்ளார்.