டில்லி : தொழிற்சாலை குப்பைகளை குவிப்போரை கண்காணிக்க ஆளில்லா விமானம்

டில்லி

தொழிற்சாலை குப்பைகளை குவிப்போரை ஆளில்லா விமானம் விமானம் மூலம் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

டில்லி நகரில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.   அவைகளின் குப்பைகளால் நகரில் ஏராளமான மாசு உண்டாகிறது.  இதனால் யமுனை நதி மிகவும் சீர் கெட்டு வருகிறது.   அது மட்டுமின்றி இந்த குப்பைகளை பாதுகாப்பின்றி எரிப்பதால் காற்று மாசுபட்டு வருகிறது.    உலகில் மாசு அதிகம் உள்ள நகரங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது.

இவ்வாறு குப்பைகளை குவிப்போர் குறித்து கண்காணிக்க அரசு முடிவு செய்தது.   குறிப்பாக இந்த பணியை டில்லி தொழிற்சாலை பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது.   இந்த கண்காணிபு அணியை நடத்துவது குறித்து பல நிறுவனங்களுடன் டில்லி தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் ஆலோசனை செய்தது.

இந்த கழகத்தின் அதிகாரி ஒருவர், “டில்லி நகரில் தொழிற்சாலை பகுதிகளில்  சட்ட விரோதமாக குப்பைகள் குவிக்கப்படுகின்றன.  அதனால் ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த குப்பை குவிப்போரை கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது,    இந்த பணிக்காக கழகம் நான்கைந்து நிறுவனங்களுடம் பேசி வருகிறது.” என தெரிவித்துள்ளார்.