டில்லி

லிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை முன்னேற்ற பல புதிய வழி முறைகளை மேற்கொள்ள உள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

அரசு நிறுவனங்களில் பல நலைவடைந்து வருகின்றன.   இந்தியன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் உட்பட பல அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.   அந்த நிறுவனங்களை முன்னேற்ற அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.   அதையொட்டி பாராளுமன்றக் குழு ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

அந்தக் குழு, “நலிவடைந்துள்ள அரசு நிறுவனங்களை முன்னேற்ற அரசு பல உதவிகளை அளித்து வருகிறது.   அதற்காக தற்போதைய 2018-19 நிதியாண்டில் அரசு சுமார் ரூ.80,000 கோடி நிதி உதவி அளிக்க உள்ளது.  இதற்கான நிதியை நலிவுற்ற நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

அத்துடன் இந்த நிறுவனங்களை நவீன மயமாக்குவது பற்றியும் ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.   இந்த நிறுவனங்கள் மூலம் அதன் நேரடி பணியாளர்கள் மட்டுமின்றி பலர் மறைமுகமாகவும் பயன் அடைந்து வருகின்றனர்.  அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.” என தனது அறிக்கையில்தெரிவித்துள்ளது.