கொரோனா தனியார் சோதனை நிலைய கட்டணங்களை அரசு ஏற்கும் : தமிழக சுகாதார செயலர்

சென்னை

மிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார்.

இன்று மாலை தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல தகவல்களைத் தெரிவித்தார்.  அதில் சில முக்கிய தக்வல்கள் வருமாறு.

இன்று தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கோரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969லிருந்து 1075 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாகத் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11  ஆகும்

கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர்.

58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது.

10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தனியார் சோதனை நிலையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை தமிழக அர்சு ஏற்றுக் கொள்ளும்.

தமிழகத்தில் இதுவரை i 8 மருத்துவர்களுக்கும் 5 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

You may have missed