டில்லி

ரசுக்கு சரியான விலை கிடைக்காவிட்டால் ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்யாது என விமானத் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதால் அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்தது.   அதை ஒட்டி பல பேரங்களும் ஊகங்களும் எழுந்தன.   அரசு தரப்பில் அதிக விலை கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.   அவ்வாறு விலைகளைக் கோர மே 31 ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து விமானத்துறை செயலர் ஆர் என் சௌபே, “அரசுக்கு ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கவோ அல்லது சரியான விலை கிடைக்காவிடில் விற்காமல் இருக்கவோ முழு உரிமை உள்ளது.   தற்போது பங்குகளுக்கான விலைகளைக் கோரி பல விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளன.   அவைகள் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குப் பின் ஆய்வு செய்யப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் விலைப்பட்டியல் வெளியிடப்படும்.

ஏற்கனவே தெரிவித்தபடி அதிகபட்ச விலையைக் கோரி உள்ளவர்களுக்கு பங்குகளை அளித்தே ஆக வேண்டும் என எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.   எனவே அரசு தான் எதிர்பார்க்கும் விலை கிடைக்காவிடில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்யாது.” என தெரிவித்துள்ளார்.