டில்லி

ந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.   அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை இந்தியாவில் 94.65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1.37 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

எனவே இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி உடனடியாக அளிக்க வேண்டிய நிலை உள்ளது.  தற்போது சில பன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் சோதனை முடிவடைந்து ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன.   இந்தியா இவற்றைக் கொள்முதல் செய்யப் பேச்சு வார்த்தை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகின.

இன்று சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவரிடம் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிக்க அரசுக்கு எத்தனை காலம் தேவைப்படும் எனக் கேட்கப்பட்டது.    அவர் பதிலின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது எனத் தெரிய வந்துள்ளது.

ராஜேஷ் பூஷன், “அரசு நாடு முழுவதும் கொரோனா ஊசி அளிக்க உள்ளதாக எப்போதும் சொல்லவில்லை என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.  இது குறித்த விஞ்ஞான  விவகாரங்களை மட்டுமே நாம் விவாதித்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.