‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் ஜானுவாக ,கெளரி கிஷண் ஒப்பந்தம்…!

சி.பிரேம் குமார் இயக்கத்தில் , விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் குடுத்த படம் “96 “.விஜய் சேதுபதி – த்ரிஷா சின்ன வயது கதாபாத்திரத்தில் ஆதித்யா – கெளரி கிஷண் நடித்தனர்.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இதை ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க, சர்வானந்த் – சமந்தா இருவரும் நடிக்கின்றனர். கன்னடத்தில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கணேஷ் – பாவனா நடித்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கிலும் ஜானுவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் கெளரி கிஷணே நடிக்கிறார். இந்தத் தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி