மதிமாறன் இயக்கும் படத்தில் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம்…!

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் , அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லாமா ஒப்பந்தமாகியுள்ளார் . வாகை சந்திரசேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

பெயரிடப்படாத இப்படத்தின் வில்லனாக தற்போது இயக்குநர் கெளதம் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

கல்லூரி மாணவருக்கு, கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திரைக்கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மதிமாறன்.

கார்ட்டூன் கேலரி